Sunday, November 14, 2010

சோகமான என் காதலே!

காலங்களை சுகமாக்க நினைத்தேன்   
நீயும் நினைத்தாய் -
என் கைக்குட்டையை !

உன்னை  வாஞ்சையாக பார்க்க,
உன் கண்களில் கோபத்தீ- 
அணைத்தேன் என் கண்ணீரால்!

உன் வார்த்தைகள் கொல்ல ,
நான் என்ன சொல்ல ;
மௌனமே என் மொழியானது . 

வருவதும் போவதும் வாழ்க்கையில் சகஜமாம் -
எதை சொன்னார்கள் ?
பெண்ணின் காதலா  ? 

நான் வாடினேன் உன் நினைவில் 
நீ ஓடினாய் பல கனவில் -
அமேரிக்க மாப்பிள்ளை !






Monday, October 18, 2010

சுகமான என் காதலே !

நீயும்  ரோஜாவும்  ஒன்று ;
காய படுத்துவதில்   -
சுகமான வலிகள் !

ஒரு வார்த்தை சொல்வாயா,
பக்தன் மகிழ -
 ஊமை சாமியே !

பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை ,
உனக்கும் அப்படித்தானோ -
கண் ஜாடைகள் !

உன்னை பாராமல் நாட்கள் நகருவதில்லை
என் விழிகளும் அப்படியே  -
உன்னை பார்க்கையில்  !

கண் மூடி திறக்கும்வரை சொர்க்கம் பக்கம்
உனக்கும் கடவுளுக்கும் நன்றி -
கனவுகள் !






Tuesday, October 5, 2010

'மனையாள்!'

அவள் கண்கள் என்னை பார்த்ததும்
மண் பார்த்தது ஏனோ?
உன்னில் வெட்கமோ?
நாணமோ?

என் மனதின்  ஓசை கேட்டதா ?
பின் ஏன் இந்த மௌனம்?
என்னை அது கொல்லும் -
என் விரகமோ?
தாபமோ?

என் வாழ்க்கையில் நீ வந்தாய் ,
பூத்தது என் நந்தவனம் -
நீ யாரோ ?
என் தாயோ?
 தாரமோ?

கடவுளை நான் வணகியதில்லை
உன்னை பார்க்கும் வரை -
இப்பொழுது வேண்டினேன் .
நன்றி சொல்லவா?
ஆயுள் நீளவா?

உயிர் பேசும் நேரம் !


வந்தவனை கண்டவுடன் ,
கொண்டவன் இவன்தானோ 
என மனம் கேட்டதை ;
யார் கேட்டது?


வெட்கி நான் நாண
கண்களின் ஓரம் வந்த ஈரம்
அது சொன்னது :
எனக்குள் நான் பூத்ததை .


சுற்றமெல்லாம் சூழ ,
அச்சாரங்கள்  பேச ,
என் கண்களின் அந்த தேடலை 
என்னவென்று சொல்ல ?


வாழ்கை எனும் பயணம்
இனி ஒன்னோடு தானென்று 
இப்பெண்ணின் மன கூச்சலை 
யாரோ  கேட்டு  ரசித்தது -
 நீதானோ?
என் உயிரே !

Wednesday, September 29, 2010

' தமையன்'

வந்ததிலும் வாழ்ந்ததிலும்
எனக்குமுன்  நீ இருக்க,
எனக்கேது கவலைகள்
என் அருமை சகோதரா?

தந்தையை உன்னில் காண
தாய்- பாசம் கண்கள் சொல்ல
என்ன தவம் செய்தேனோ
உன் அரவணைப்பின் அருமைக்கு ?

குற்றங்கள் செய்தபோது
தாய் என்னை அடித்திட,
தந்தை என்னை கண்டிக்க
என் மனம் நீயே அறிந்திடுவாய் .


தவறுகள்  நீ  செய்து  
தண்டனை  வாங்குகையில் ,  
உன்னை  நான்  கண்டு  
பாடங்கள்  படித்தேனே . 

குறும்புகள் செய்த போதும்
அரும்பென என்னை மன்னிக்க,அன்புள்ளமே
கண்ணோரம் நீர் வந்தது
 நினைவுகளை நினைத்திடவே .

இன்னொரு பிறவி இருப்பின்
உனக்கே நான் தங்கையாக;
மறித்தாலும்  பிறந்திடுவேன்
உனக்கே நான் சேயாக.



Thursday, September 23, 2010

மறத்தல் ஆகுமோ ?

புவியிலே தாயை புகழ 
நல்லோர் நிறம்பி இருக்க ,
தந்தையை மறந்ததேனோ  
என் அன்புள்ள சகோதரனே ?

தந்தையின்றி இங்கு 
தாயில்லை புவியினிலே ,
தாங்கிய தோள்களின்றி
பூந்தோட்டம் வாழ்ந்திடுமோ ?

பாலூட்டி சோறூட்டி 
தாய் பறவை அரவணைக்க ,
பறந்தோடி கொணருமே
தாய்க்குமே வயிறார .

தாயோடு சேயையுமே 
காக்கும் அரண் இங்கிருக்க ,
நம் தந்தையை மறந்ததேனோ  
என் இனிய சகோதரனே ?





Friday, September 17, 2010

'தொட்டில்'


சின்னதோர் மின்மினி, தோட்டத்தில் விளையாட,
என்னை நான் மறந்தேன் சில நொடி.

கால் தட்டி விழுந்ததோ - என் செல்லம்,
நீ அழும்பொழுதும் , ரசிக்கவே தோன்றும்.

ஓடி வந்து அணைத்தது என்னை - என் பிம்பம்,
உலகத்தில் எவ்வளவு எவ்வளவோ இன்பம்?

எவன் சொன்னது 'உலகம் ஒரு மாயை'?
அவனோ மழலை இன்பம் தெரியாதொரு பேதை.

கடவுளை நித்தம் காண்கிறேன் , என் வீட்டில்
என் வாழ்கையை நிறைத்தது - என் தொட்டில்.





Friday, September 10, 2010

இறுதி ஊர்வலம்





வழிநெடுகே பூக்கள், 

மனம் ரசிக்கவில்லை;
என் உறவின் இறுதி ஊர்வலம் .



                                                     
காலமெல்லாம் காத்திருந்திருப்பேன், 
இன்று  என் காதலின்  இறுதி ஊர்வலம் ;
உன் மண நாள். 



வாயில் அரிசியும் பாலும் ஊற்றி, 
தம்பட்டமான இறுதி ஊர்வலம் ;
தூவிய பூக்களுக்கும் தான். 


நிகழ்வுகளின் நிறங்கள் வெவ்வேறு , 
அவற்றின் சாட்சிகளும் அப்படியே ; 
பூக்கள்! 






Thursday, September 9, 2010

நீரின் கால்தடங்கள்




பேய்ந்து முடிந்தது ,ஜோ! வென மழை,
சந்தோஷத்தில் என் மனம் குதிகுதோ,
அட! தவளைகள்.

ஆளில்லா காட்டிலேயும் 
பாசத்தை பொழியும் தாய்:    
அழகான அருவி! 

கண்ணுக்குள் கண்ணாடி,
கருணை பெருக்கு,
கண்ணீர் !


Wednesday, September 8, 2010

'குட்டி வானவில்'


வானவில்லின் நிறங்கள் எவ்வளவு  அழகு !
மனிதன்  படைத்த  எந்த  பொருளும்  
வானவில்லைபோல்  வர்ணஜாலம்  செய்வதில்லை .


இப்படி  நினைத்துகொண்டே  இருக்கும்  பொழுது, 
என்  கைமேல்  ஒரு  குட்டி வானவில் : வண்ணதிபூச்சி,
வந்து  உட்கார்ந்தது  சிலாகிப்பாக .


அதை  தொட்டு  பார்த்தேன் ,என்ன  அதிசயம் !
அதன் நிறங்கள் என்னோடு   ஒட்டி  கொண்டது .
நானும்  அழகானேன் .

Tuesday, August 24, 2010

வணக்கம்

இந்த  வலை பக்கம் என்னுடைய புதிய முயற்சி.
இதில் நான் வெற்றி பெற கடவுளையும் உங்களையும் வேண்டி ஆரம்பிக்கிறேன்.