நீயும் ரோஜாவும் ஒன்று ;
காய படுத்துவதில் -
சுகமான வலிகள் !
ஒரு வார்த்தை சொல்வாயா,
பக்தன் மகிழ -
ஊமை சாமியே !
பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை ,
உனக்கும் அப்படித்தானோ -
கண் ஜாடைகள் !
உன்னை பாராமல் நாட்கள் நகருவதில்லை
என் விழிகளும் அப்படியே -
உன்னை பார்க்கையில் !
கண் மூடி திறக்கும்வரை சொர்க்கம் பக்கம்
உனக்கும் கடவுளுக்கும் நன்றி -
கனவுகள் !

No comments:
Post a Comment