![]() |
வந்தவனை கண்டவுடன் ,
கொண்டவன் இவன்தானோ
என மனம் கேட்டதை ;
யார் கேட்டது?
வெட்கி நான் நாண
கண்களின் ஓரம் வந்த ஈரம்
அது சொன்னது :
எனக்குள் நான் பூத்ததை .
சுற்றமெல்லாம் சூழ ,
அச்சாரங்கள் பேச ,
என் கண்களின் அந்த தேடலை
என்னவென்று சொல்ல ?
வாழ்கை எனும் பயணம்
இனி ஒன்னோடு தானென்று
இப்பெண்ணின் மன கூச்சலை
யாரோ கேட்டு ரசித்தது -
நீதானோ?
என் உயிரே !

No comments:
Post a Comment