எனக்குமுன் நீ இருக்க,
எனக்கேது கவலைகள்
என் அருமை சகோதரா?
தந்தையை உன்னில் காண
தாய்- பாசம் கண்கள் சொல்ல
என்ன தவம் செய்தேனோ
உன் அரவணைப்பின் அருமைக்கு ?
குற்றங்கள் செய்தபோது
தாய் என்னை அடித்திட,
தந்தை என்னை கண்டிக்க
என் மனம் நீயே அறிந்திடுவாய் .
தவறுகள் நீ செய்து
தண்டனை வாங்குகையில் ,
உன்னை நான் கண்டு
பாடங்கள் படித்தேனே .
குறும்புகள் செய்த போதும்
அரும்பென என்னை மன்னிக்க,அன்புள்ளமே
கண்ணோரம் நீர் வந்தது
நினைவுகளை நினைத்திடவே .
இன்னொரு பிறவி இருப்பின்
உனக்கே நான் தங்கையாக;
மறித்தாலும் பிறந்திடுவேன்
உனக்கே நான் சேயாக.








