Friday, September 10, 2010

இறுதி ஊர்வலம்





வழிநெடுகே பூக்கள், 

மனம் ரசிக்கவில்லை;
என் உறவின் இறுதி ஊர்வலம் .



                                                     
காலமெல்லாம் காத்திருந்திருப்பேன், 
இன்று  என் காதலின்  இறுதி ஊர்வலம் ;
உன் மண நாள். 



வாயில் அரிசியும் பாலும் ஊற்றி, 
தம்பட்டமான இறுதி ஊர்வலம் ;
தூவிய பூக்களுக்கும் தான். 


நிகழ்வுகளின் நிறங்கள் வெவ்வேறு , 
அவற்றின் சாட்சிகளும் அப்படியே ; 
பூக்கள்! 






Thursday, September 9, 2010

நீரின் கால்தடங்கள்




பேய்ந்து முடிந்தது ,ஜோ! வென மழை,
சந்தோஷத்தில் என் மனம் குதிகுதோ,
அட! தவளைகள்.

ஆளில்லா காட்டிலேயும் 
பாசத்தை பொழியும் தாய்:    
அழகான அருவி! 

கண்ணுக்குள் கண்ணாடி,
கருணை பெருக்கு,
கண்ணீர் !


Wednesday, September 8, 2010

'குட்டி வானவில்'


வானவில்லின் நிறங்கள் எவ்வளவு  அழகு !
மனிதன்  படைத்த  எந்த  பொருளும்  
வானவில்லைபோல்  வர்ணஜாலம்  செய்வதில்லை .


இப்படி  நினைத்துகொண்டே  இருக்கும்  பொழுது, 
என்  கைமேல்  ஒரு  குட்டி வானவில் : வண்ணதிபூச்சி,
வந்து  உட்கார்ந்தது  சிலாகிப்பாக .


அதை  தொட்டு  பார்த்தேன் ,என்ன  அதிசயம் !
அதன் நிறங்கள் என்னோடு   ஒட்டி  கொண்டது .
நானும்  அழகானேன் .

Tuesday, August 24, 2010

வணக்கம்

இந்த  வலை பக்கம் என்னுடைய புதிய முயற்சி.
இதில் நான் வெற்றி பெற கடவுளையும் உங்களையும் வேண்டி ஆரம்பிக்கிறேன்.