Monday, October 18, 2010

சுகமான என் காதலே !

நீயும்  ரோஜாவும்  ஒன்று ;
காய படுத்துவதில்   -
சுகமான வலிகள் !

ஒரு வார்த்தை சொல்வாயா,
பக்தன் மகிழ -
 ஊமை சாமியே !

பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை ,
உனக்கும் அப்படித்தானோ -
கண் ஜாடைகள் !

உன்னை பாராமல் நாட்கள் நகருவதில்லை
என் விழிகளும் அப்படியே  -
உன்னை பார்க்கையில்  !

கண் மூடி திறக்கும்வரை சொர்க்கம் பக்கம்
உனக்கும் கடவுளுக்கும் நன்றி -
கனவுகள் !






Tuesday, October 5, 2010

'மனையாள்!'

அவள் கண்கள் என்னை பார்த்ததும்
மண் பார்த்தது ஏனோ?
உன்னில் வெட்கமோ?
நாணமோ?

என் மனதின்  ஓசை கேட்டதா ?
பின் ஏன் இந்த மௌனம்?
என்னை அது கொல்லும் -
என் விரகமோ?
தாபமோ?

என் வாழ்க்கையில் நீ வந்தாய் ,
பூத்தது என் நந்தவனம் -
நீ யாரோ ?
என் தாயோ?
 தாரமோ?

கடவுளை நான் வணகியதில்லை
உன்னை பார்க்கும் வரை -
இப்பொழுது வேண்டினேன் .
நன்றி சொல்லவா?
ஆயுள் நீளவா?

உயிர் பேசும் நேரம் !


வந்தவனை கண்டவுடன் ,
கொண்டவன் இவன்தானோ 
என மனம் கேட்டதை ;
யார் கேட்டது?


வெட்கி நான் நாண
கண்களின் ஓரம் வந்த ஈரம்
அது சொன்னது :
எனக்குள் நான் பூத்ததை .


சுற்றமெல்லாம் சூழ ,
அச்சாரங்கள்  பேச ,
என் கண்களின் அந்த தேடலை 
என்னவென்று சொல்ல ?


வாழ்கை எனும் பயணம்
இனி ஒன்னோடு தானென்று 
இப்பெண்ணின் மன கூச்சலை 
யாரோ  கேட்டு  ரசித்தது -
 நீதானோ?
என் உயிரே !